No results found

    5 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் வழியாக நாளை முதல் பஸ்கள் இயக்கம்


    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.79 கோடியில் கட்டும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பயணிகள் கோரிக்கை சுமார் 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பஸ் நிலைய பணிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி, முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தின் சுற்றுப்புற பகுதி வழியாக மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (திங்கட்கிழமை) முதல் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தகர சீட்டுகள் அகற்றம் இதற்காக கடந்த சில நாட்களாக ராஜா பில்டிங் சாலையில் பஸ் நிலைய கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகள் அகற்றப்பட்டு சற்று உள்ளே தள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் சாலை அகலப்படுத்துதல் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில், பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது வெயில், மழையினால் பாதிக்கப்படாமல் இருக்க பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 4 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நின்று செல்லும் பஸ்கள் விவரம்

    இந்த 4 நிறுத்தங்களிலும் நின்று செல்லும் பஸ்கள் குறித்த விவரத்தை நெல்லை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சந்திப்பு பழைய பஸ் நிலையத்தில் 1-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் மார்க்கமாக செல்லும் பஸ்களான 1-டிஎல்எக்ஸ், 2-டி.எல்எக்ஸ் பஸ்கள் இயக்கப்படும். 2-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பாளை பஸ் நிலையம் மார்க்கமாக செல்லும் பஸ்களான 3 டி, 5 சி, 50, 5இ, 5ஈ, 9எப், 9, 104, 108, 10 எச். 101, 10, 10 கே, 10 எல், 11 ஏ, 14 சி, 22 சி ஆகிய பஸ்கள், இதே போல் 3-வது பஸ் 10சி, 10 டி, 10இ, 10எப் உள்ளிட்டவைகள்,

    3-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பாளை மார்க்கெட் மார்க்கமாக செல்லும் 16 ஏ, 16 சி, 16 டி, 6 எச், 3.ஏ, 4 எம், 6 சி, 98, 58. 15 எச், 12 எல், 161, 13ஏ, 13 பி, 9 எப், 9 என், 9 க்யூ 5 இ. எம். 0, 66, 8டி, 7பி, 9எம், 9பி, 10 கே, 10 எல், 14 ஏ, 4ஜே, 7 என், 70, 9 ஆர், 14 பி, 5ஏ, ஏகே. 3 டி, 12 எம், 121, 128, 15எப், 12 கே. 15 ஜி. 10. ஏ. 16 எப், 166, 15 ஏ. 158, 11 சி, 12 இ, 15 டி., 16 எச், 38 வி, 151, 16இ, 12 எச், 12 ஜே, 168 ஆகிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதே போல் 4-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்களான 6 ஏ, 38 வி, 68, 7எப், 78, 7 எச், 41, 5சி, 71, 71, 7சி, 22 சி, 5 ஏ, 7 ஜி, 148, 7எம், 7டி.7 பி, 60, 70, 4எம், 9டி, 12 எச், 10சி, 7ஏ, 5 எப், 98, 134, 6சி, 9க்யூ, 8டி, 6எச், ஏ.8இ.ஏ, 7க்யூ, 75, 7 ஆர், 7 என். 3வி. 9.எல். 10.பி. ஏ, 12 எல், 10 இ. 15 சி. 121. 15டி,3ஏ.5இ, 121, 16 ஏ. 101, 15 எப். 6.எச். 10.ஏ.6டி, 12 கே.5.எச்.4பி, டி 156, 12பி வழித்தட பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தூய்மை பணிகள் நாளை முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ள நிலையில் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இன்று மாலை முன்னோட்டமாக சில பஸ்களை இயக்கி பார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் மாநகராட்சி அலுவலகம் எதிரே பொருட்காட்சி திடலில் தற்காலிகமாக இயங்கி வரும் பஸ் நிலையம் மூடப்பட உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال